சினிமா செய்திகள்

எனக்கு பணம் தேவையில்லை உரிமைதான் முக்கியம் – பிகில் கதை குறித்து உதவி இயக்குநர் உருக்கம்

நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி உதவி இயக்குநர் கே.பி.செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பின், காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற்று அதன்பின், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் அட்லி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிகில் படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் என வாதிட்டார். மேலும், கீழமை நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனு திரும்பப்பெறப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை எனவும், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடந்த விசாரணை முடிவில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இது குறித்து, உதவி இயக்குநர் கே.பி.செல்வா எழுதியுள்ள பதிவு….

ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,

போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு !!

உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க !!

அண்ட் இது விஷயமா ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்தேன் !! அப்ப அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல,

அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2019 கதை பதிவு பண்ணி இருந்தா ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல !!

எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும் !!

இப்ப வர அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல !!

நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல !! எங்க நோக்கமும் அது இல்ல !!

காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு நிறைய பேர் சொல்றீங்க, என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்ச கேட்டேன் அவ்ளோதான்,

இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது,

எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை தடை செய்றது இல்ல, அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல, எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு,

நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க !! Respect your enemy !! அதனால உண்மையா நேர்மையா பேசுங்க !! அதவிட்டுட்டு பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க !!

Ignore negativity !! படத்துல கூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல !! So im happy that im in negative shade in your point of view !! End of the day நான் உங்கள ஜெயிக்கல ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்சேன் !! அது போதும் நெறைய கத்துக்கிட்டு எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல இது நீங்க சொல்ற காச விட பெருசு so எல்லாத்துக்கும் நன்றி !!

Kp.Selvah

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts