செய்திக் குறிப்புகள்

தனுஷின் இருமொழிப்படம் – பெயர் வடிவமைப்பு வெளியானது

தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான   சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக  நடிகர் ‘தனுஷ்’ நாயகனாக நடிக்கும் ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக  சம்யுக்தா மேனன் நடிக்கிறார் .இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலேயே ராங்டே  படத்தை இயக்கிய இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்குகிறார் .

சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறர்.

இன்று (டிசம்பர்23,2021) இந்தப் படத்தின் பெயர் வடிவமைப்பு மற்றும் சலனப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .

சூர்யதேவரா நாக வம்சியின்  சித்தாரா  என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யாவுடன் (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2022ல் தொடங்குகிறது.

Related Posts