பிரதமரைச் சந்திக்கிறார் சூர்யா
கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் நாயகனாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முதலில் இந்த வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கப் போகிறார் என்று சொன்னார்கள். அவரை மறுத்துவிட்டு மோகன்லாலை ஒப்பந்தம் செய்ய காரணம் இருக்கிறதாம்.
இந்தக் கதையில் அவருக்கு இந்தியப் பிரதமர் வேடம். வட இந்தியப் பிரதமராக இல்லாமல் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தால் நலம் என்பதால் மோகன்லாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
ஆக இந்தப் படத்தில் பிரதமரைச் சந்திக்கவிருக்கிறார் சூர்யா.