சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் வரலாற்றில் முதன்முறையாக – இந்தியன் 2 தந்த அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.

சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.

நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறது.

அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்ததாம். அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள்.

அதன்பின் கமல் அரசியல் வேலைகளில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு தாமதம் என்றார்கள்.

இந்தக் காரணங்கள் உண்மை என்றாலும் இதைத் தாண்டி ஒரு பெரிய விசயம் நடந்திருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கியவுடன் நிறுத்தியதோடு, கமலின் ஒப்பனை உட்பட கூடுதலாக செலவு பிடிக்கும் சில விசயங்களை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கேட்டவுடன் கடுப்பாகிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம்.

உடனே, இவ்வளவு தொகைக்குள் இந்தப்படத்தை எடுத்து முடிப்பேன் அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் தயாரித்து ஷங்கரிடம் கொடுத்துவிட்டார்களாம்.

இதில் கையெழுத்துப் போட்டால் படப்பிடிப்பை நடத்துவோம் இல்லையென்றால் இப்படியே போய்விடலாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

அதிர்ந்து போன ஷங்கர் சில நாட்கள் யோசனைக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம்.

13 படங்கள் வரை இஷ்டத்துக்கு எடுத்து வந்த ஷங்கர் 14 ஆவது படத்தில் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் நிலைக்கு ஆளாகிவிட்டார் என்கிறார்கள்.

Related Posts