சினிமா செய்திகள் நடிகர்

மற்ற நடிகர்களின் தொல்லை தாங்க முடியல – புலம்பும் சூர்யா ரசிகர்கள்

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’.செல்வராகவன் இயக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு மற்றும் பட வெளியீடு குறித்து அவ்வப்போது சூர்யா ரசிகர்கள், அடுத்த ‘என்.ஜி.கே’ அப்டேட் என்று படக்குழுவினரிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அண்மையில் இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

அதற்கும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் படம் சிறப்பாக வந்தால் போதும் என்று சூர்யா ரசிகர்கள் சொல்லியிருந்தார்கள்.

இந்நிலையில் இன்று, எங்கு போனாலும் ஏதேனும் ஒரு இடையூறு அல்லது தடை முளைத்துக் கொண்டே இருக்கும். அதை பெரிதாய் பொருட்படுத்தாது முன்னே நோக்கி நகர்ந்து விட்டால் அதுவும் “ஓ ..இங்கே வேலைக்கு ஆகாது ” என விலகி விடும். முயற்சித்து பாருங்கள் !

என்று செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார்.

அது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் சூர்யா ரசிகர்கள்,

Sir plzzz sir எங்களுக்கு எப்படியாச்சி படத்தை முடிச்சி குடுங்க sir மற்ற நடிகர்களின் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியல sir plzzzzz???, #NGK

என்கிற கருத்தைப் பெரும்பாலோனோர் தெரிவிக்கின்றனர்.

Related Posts