ஜோதிகாவின் காற்றின்மொழி ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் காற்றின் மொழி. சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.
ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
ஜோதிகா சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக அணமியில் தெரிவித்தனர்.
இன்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலோடு அக்டோபர் 18 ஆம் நாள் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதபூசை விடுமுறை நாட்கள் என்பதால் அந்தத் தேதியைப் படக்குழு தேர்ந்தெடுத்திருக்கிறது.
அதே தேதியில் விஷாலின் சண்டக்கோழி 2 படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.











