October 16, 2026
சினிமா செய்திகள்

புதிய சாதனை புரிந்த விஜய்சேதுபதி படம்

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த படம் ஜுங்கா.

ஜூலை 27 அன்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு நல்ல வசூலையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் பெரிய விலைக்குப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய்சேதுபதி படங்களுக்கு இதுவரை கிடைக்காத அளவு இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக எட்டுகோடி ரூபாய் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜீ தொலைக்காட்சி இந்தப்படத்தின் உரிமையைப் பெற்றிருக்கிறதாம்.

இப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு நடிகராக விஜய்சேதுபதிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்குக் கிடைத்திருக்கும் தொகையால் தயாரிப்பாளராகவும் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதில் மாற்றமில்லை.

Related Posts