September 22, 2026
சினிமா செய்திகள் நடிகர்

பேச்சோடு நில்லாமல் செயலில் இறங்கிய சிம்பு – சேலத்தில் பரபரப்பு

காவிரி விசயத்தில் நடிகர் சிம்பு சொன்ன கருத்துகள் சர்ச்சையாகின. அதன்பின் அதைச் சமன் செய்யும் விதமாக பேட்டி கொடுத்தார்.

வெறும் பேச்சோடு நில்லாமல் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி களமிறங்கியிருக்கிறார்.

ஆம், திடீரென சேலம் போன சிம்பு, அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் உடன் இணைந்து சில நீர்நிலைகளைப் பார்வையிட்டார்.

படகில் சென்று பார்வையிட்ட சிம்பு, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீர்நிலைகளைப் பாதுகாக்க என்னால் இயன்றதைச் செய்ய எண்ணி இங்கு வந்துள்ளேன். என்ன செய்யப்போகிறேன் என்பதை ஏப்ரல் 23 அன்று சொல்கிறேன் என்றார்.

சிம்புவின் இந்த திடீர் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts