கமல், விஷால் மீது காயத்ரிரகுராம் குற்றச்சாட்டு

ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார் அளிப்பேன் என ட்விட்டரில் சொல்லியிருந்தார்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள அவரிடம் செய்தியாளர் ஒருவர் பேசியபோது, கமல் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
கடந்த பல மாதங்களாவே (பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு) சோஷியல் மீடியாவால் எனக்கு நிறைய பிரச்னை வருகிறது. இது கட்சியினர், சினிமா துறையினருக்குத் தெரியும். ஆனால், இதுவரை யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
நடிகர் சங்கமும் உதவவில்லை. அது எனக்குப் பெரிய வருத்தம். குறிப்பா, ‘பிக் பாஸ்’ல இருந்து நான் வெளிய போறப்போ, ‘உங்களுக்கு என் சப்போர்ட் எப்போதும் உண்டு’னு கமல்ஹாசன் சார் சொன்னார். அவர் எங்க குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. ஆனால், இதுவரை அவர்கூட என் பிரச்னை குறித்து கேட்கலை. எல்லோருக்கும் அவங்கவங்க தனிப்பட்ட நலன்தான் பெரிசா இருக்கு. மத்தவங்க பிரச்னைக்கு குரல் கொடுக்க முன்வருவதில்லை என்று மிகவும் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்.