September 15, 2026
சினிமா செய்திகள் நடிகர்

இரும்புத்திரை படம் பற்றிய வதந்தி – விஷால் மறுப்பு

பி.ஏஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இரும்புத்திரை.

இந்த படம் 2018 சனவரி பொங்கல் நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

பின்னர் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

அப்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ படத்தை பி்பரவரி 9-ம் தேதி வெளியிடத்திட்டமிட்டிருந்தனர். கீ திரைப்படம் வெளியாவதால் இரும்புத்திரை படம் வெளியீட்டை தள்ளி வைப்பதாக கீ’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் விஷால் அறிவித்தார்.

இறுதியாக இரும்புத்திரை மார்ச்-29-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியதால்,அறிவித்தபடி படம் வெளியாகவில்லை.

ஏப்ரல் 19 ஆம் தேதியுடன் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மே 18 ஆம் தேதி இரும்புத்திரை வெந்ளியாகவுள்ளது என்று செய்தி பரவியது.

இதை விஷால் மறுத்துள்ளார். மே 18 இரும்புத்திரை வெளியாகும் என்பது வதந்தி. படத்தின் வெளியீட்டுத்தேதியை நாங்களே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று விஷாலின் செய்தித்தொடர்பாளர் சொல்கிறார்.

Related Posts