சிம்புவின் அடுத்த படம் – இயக்குநர் பற்றி புதிய தகவல்
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் அந்தச் செய்தி கசிந்து பல மாதங்கள் ஆகியும் இருவர் தரப்பிலிருந்தும் ஆமோதிப்போ எதிர்ப்போ வரவில்லை என்பதால் அதுதான் நடக்கவிருக்கிறது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
சுதாகொங்கரா அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் நாயகன் சிம்பு என்று சொல்கிறார்கள்.
சுதாகொங்கரா சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்திருக்கிறதாம். அந்தக்கதையில் நடிக்க சிம்பு சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்தப்படத்தைத் தயாரிக்கப் போவது யார்? என்பது குறித்தும், மாநாடு, பத்துதல ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிலவரங்கள் குறித்தும் பேச்சு நடப்பதாகவும் அவற்றில் ஒரு தெளிவு கிடைத்த பின்பு சிம்பு சுதாகொங்கரா கூட்டணி பற்றிய அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள்.
பார்க்கலாம்.











