Uncategorized சினிமா செய்திகள்

கபாலி டாக்கீஸ் டிரெய்லர் – விஜய் ஆண்டனி வெளியிடுகிறார்

இயக்குநர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர் கதாநாயகன் படத்தின் இயக்குநராவார். ஏற்கனவே இவர் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” “மரகத நாணயம்” படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர்.

இப்படத்தில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் நடித்துள்ளார். கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி,மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ரவிசீனிவாசன். இப்படம் மூலம்
அவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முதல்பார்வையை இயக்குநர் பாலா வெளீயிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் ஆண்டனி வெளீயிடவிருக்கிறார்.

Related Posts