சினிமா செய்திகள்

பிறந்தநாளன்று சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று  44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார்.
இப்படம் எப்போது எடுக்கப்பட்டது, யாரால் பகிரப்பட்டது? என்கிற எந்தத் தகவலும் இல்லை.

ஆனாலும், இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில்….

இதற்கு முன்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அதே போன்ற நடவடிக்கை விஜய்சேதுபதி மீதும் எடுக்கப்படுமா? இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது?. 

ஒரு பிரபல நட்சத்திரம் இதுபோல் செயல்படுவது முறையல்ல.. வருத்தம் தெரிவிக்க வேண்டும்..இளைஞர்களுக்கு நல்லொழுக்க உந்து சக்தியாக இருக்க வேண்டும்..(பிரபலம் என்பது மக்களால்-ஆனால் மக்களுக்கு சென்றடைவது) 

இது அட்ட கத்தியோ நிஜ கத்தியோ பார்ப்பவர்களுக்கு இது தவறாக தான் தூண்டும் ….தூண்டுதல் இங்கு இருந்து தான் ஆரம்பிக்கிறது….இதற்கு நடவடிக்கை தேவை…இது பார்ப்பதற்கு சினிமா காட்சி அல்ல…. 

இவ்வாறெல்லாம் விமர்சனம் வைக்கப்படுகிறது.

Related Posts