சுணங்கிய இயக்குநர் சூடான தயாரிப்பாளர் – விஷால் பட விவகாரம்
வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால்.இது அவருடைய 32 ஆவது படம். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதற்கடுத்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்குவது ஆதிக்ரவிச்சந்திரன். எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது.
அதைத் தொடர்ந்து அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.
இப்படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரனிடம், இந்தப்படப்பிடிப்பில் என்னவெல்லாம் படமாக்கப் போகிறீர்கள்? அதன் எழுத்து வடிவத்தைக் காட்டுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
இயக்குநரோ, உங்களிடம் அதையெல்லாம் உங்களிடம் சொல்லவியலாது என்றதோடு தயாரிப்பாளர்களுக்குத் திரைக்கதை பற்றி என்ன தெரியும்? என அலட்சியமாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் தயாரிப்பாளருக்கு எட்டிவிட்டதாம். உடனே, இயக்குநரைக் கூப்பிட்ட தயாரிப்பாளர், எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு? ஒவ்வொரு நாளும் என்ன எடுக்கப்போகிறீர்கள்? என்கிற விவரத்தை விவரமாக என்னிடம் சொல்லவில்லையெனில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடக்காது? என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.
அதன்பின், சில நாட்கள் தன் குழுவினரோடு அமர்ந்து பேசி, படமாக்கப்போகும் விசயங்களைத் தயாரிப்பாளருக்கு விளக்கினாராம் இயக்குநர்.
அதன்பின், படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.
இயக்குநரிடம் கறாராக நடந்துகொண்ட தயாரிப்பாளர் வினோத் போல் எல்லாத் தயாரிப்பாளர்களும் இருந்தால் வீண்செலவுகள் தவிர்க்கப்பட்டு திரைத்தொழில் நன்றாக இருக்கும் என்பதுதான் இப்போதைய சூடான பேச்சு.











