மிஷ்கின் அருண்விஜய்க்கு கொரோனா?
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா, அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் கூட விட்டுவைக்கவில்லை.அதோடு தமிழ்த் திரையுலகையும் அது பாதித்திருக்கிறது.திரையுலகில் பலருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதை இரகசியமாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதைத்தாண்டி திரையுலகில் பலருக்குத் தெரிந்த இரகசியமாக உலாவரும் தகவல்களில், இயக்குநர் மிஷ்கின், நடிகர் அருண்விஜய், இயக்குநர் மோகன்ராஜா, தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இவர்கள் தவிர இன்னும் சில தயாரிப்பாளர்களும் ஃபைனான்சியரும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவர்கள் அனைவருமே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் விரைவில் நலம் பெறுவர் என்றும் சொல்கிறார்கள்.











