சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – இவ்வளவு சம்பளமா? வியப்பில் திரையுலகம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியுள்ளன.இவற்றிற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

ஆனால், அடுத்து அவர் தெலுங்குப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படம் முடிந்ததும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அவற்றிற்கடுத்து, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

அப்படத்தை ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய போதே சிவகார்த்திகேயனும் ராஜ்குமார்பெரியசாமியும் நண்பர்களாம். அப்போதிருந்தே இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருப்பார்கள் என்றும் அது இப்போது நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.

ராஜ்குமார்பெரியசாமி இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

அதன் விளைவே இந்தக்கூட்டணி அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் சுமார் 30 கோடியாம்.

கமல் இவ்வளவு சம்பளம் கொடுத்து இன்னொரு நடிகரை நடிக்க வைக்கும் தகவல் அறிந்தோர் வியப்பில் வாய் பிளக்கின்றனர்.

Related Posts