பாக்யராஜ் சசிகுமார் இணையும் பட இயக்குநர் மாற்றம்
பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது.
பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார் என்று சொல்லப்பட்டது.
2020 மே மாதம் அந்த அறிவிப்பு வந்தது.
ஆனால் இன்று அப்படம் குறித்து வந்த அறிவிப்பில்….
37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்உருவாகும் பாக்யராஜின் “முந்தானை முடிச்சு ” சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.
ஜேஎஸ்பி சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
பெரும் வெற்றியடைந்த”சுந்தரபாண்டியன்”, விரைவில் திரைக்கு வரவுள்ள “கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தயாரிப்பாளர் ஜேஎஸ்பி சதீஷ் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












