தனுஷுக்கு வந்த பத்துகோடி – வாத்தி பட தகவல்
தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி.
வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வந்த போது தனுஷ் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
அவருக்கு பதினாறு கோடி சம்பளப்பாக்கி வைத்துவிட்டு படத்தை வெளியிடும் அறிவிப்பை வெளியிட்டதால் கோபமான அவர் அப்படத்தைக் கண்டுகொள்ள்வில்லை என்று சொல்லப்பட்டது.
இப்போது நவம்பர் 10 அன்று வாத்தி படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வெளியாகவிருக்கிறது எனும் தகவலை தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து பாடல்வரிகளைப் பாடும் காணொலியையும் பகிர்ந்திருந்தார்.
இதன்மூலம் தயாரிப்பு நிறுவனத்தோடு சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பது தெரிகிறது.
எப்படி நடந்ததாம்?
தனுஷுக்கு ஒரே நேரத்தில் சுமார் பத்துகோடியைக் கொடுத்துவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். மீதியை பட வெளியீட்டு நேரத்தில் கொடுத்துவிடுகிறோம் என்றும் தயாரிப்புத் தரப்பு உறுதியளித்ததாம்.
அதனால் சமாதானமடைந்த தனுஷ், வாத்தி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஆர்வமாக இறங்கியிருக்கிறாராம்.











