சினிமா செய்திகள் நடிகர்

வடசென்னை வெற்றிமாறன் செய்த வேலை – தனுஷ் அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இப்படம் பற்றி அறிவித்த பிறகு மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். நான்காவதாக அவர் இயக்கும் படத்தை எடுத்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் மட்டுமின்றி திரையுலகமே அதிரும் வகையில் ஒரு வேலை செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

பட வேலைகள் மொத்தமும் முடிவடைந்து படம் முழுமையாகத் தயாராகிவிட்டது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க்கிறார்கள்.

திருநெல்வேலியில் தன் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் தனுஷை அணுகிய வெற்றிமாறன், வடசென்னைக்காக இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொன்னாராம்.

அதைக் கேட்ட தனுஷுக்கு பேரரதிர்ச்சி. முதலில் மறுத்த தனுஷ், வெற்றிமாறன் மிகவும் வேண்டிக்கேட்டுக் கொண்டதால் நடிக்கச் சம்மதித்தாராம். சில் நாள்கள் தாடி வளர்த்து அவர் தயாரானதும் குழுவினரோடு திருநெல்வேலி சென்று இப்போது படப்பிடிப்பை நடத்திகொண்டிருகிறாராம் வெற்றிமாறன்.

இப்படம் பற்றி அறிவித்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. படப்பிடிப்பு தொடங்கி சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

இவ்வளவு காலம் கடந்தும் இன்னும் படப்பிடிப்பு என்று வெற்றிமாறன் சொன்னதை அறிந்த திரையுலகம் அதிர்ந்திருக்கிறது.

கதை மற்றும் திரைக்கதையில் தெளிவாக இருந்தால் இவ்வளவு குழப்பங்கள் வராதே? ஒரு படத்துக்கு இப்படி செலவு மேல் செலவு வைத்துக்கொண்டிருந்தால் அதை மீட்டெடுப்பது எப்படி? என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts