October 18, 2026
சினிமா செய்திகள்

பிக்பாஸை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம்

சிகரெட் பிடிப்பதால் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களைப் போலவே அதே விரக்தி காரணமாகத்தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இந்தப் பழக்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை. ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள்தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம். இது போலியானது”

என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருந்தார்.

திடீரென அவர் இவ்வாறு கூறக்காரணம்,

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் பேசும்போது, ஆணுக்குச் சமமாக இருப்பது என்பது ஆணை விடச் சிறப்பாக இருப்பதில்தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும் தவறுகளைச் செய்வதால் அவர்களை விடச் சிறந்தவர்கள் ஆகிவிட முடியாது. உதாரணத்துக்கு சிகரெட் பிடிப்பது. அது உங்களை அவர்களுக்குச் சமமாக ஆக்கிவிடாது. அது ஒழுக்கக்கேடு என்பதை விட ஆரோக்கியத்துக்குக் கேடு என்று கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே காயத்ரிரகுராம் கூறியிருக்கிறார்.

காயத்ரி ரகுராமின் இந்தக்கருத்துக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

Related Posts