தன் முதல்பட இசையமைப்பாளருக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான முதல்படம் மெரினா.
2012 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் கிரிஷ்.
அவர் தற்போது இசையமைத்திருக்கும் புதிய படம் பக்சி.
இந்தப்படத்தின் முதல் பாடலை ஜூலை 11 அன்று வெளியிட்டார்கள்.
அந்தப்பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
தன்னுடைய முதல்பட இசையமைப்பாளர் என்கிற நன்றியோடு அவர் பாடலை வெளியிட்டிருக்கிறார்.
அவருடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டதால்,பரவலாகச் சென்றடைந்திருக்கும் அப்பாடல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.











