செய்திகள் நடிகர்

‘காலா’ டப்பிங்கை ஆரம்பித்த ரஜினிகாந்த்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காலா’.

இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts