தனுஷ் பட வெளியீட்டுத் தேதி மாறுகிறது
தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி.
வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 19 ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
ஆனால், இப்போது இந்த வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள்.
ஏனெனில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்கவேண்டியிருக்கிறதாம். அதோடு இதுவரை தனுஷ் குரல்பதிவு செய்யவில்லையாம்.
ஏனெனில் அவருக்குப் பல கோடி சம்பளப்பாக்கி இருக்கிறது என்றும் அது வந்தால்தான் அவர் குரல்பதிவு செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக்காரணங்கள் மட்டுமின்றி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை விற்பனையில் இதுவரை ஒரு உறுதியான முடிவு வரவில்லையாம்.
ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு உரிமையை வாங்க யாரும் முன்வராததால் பிரித்துப் பிரித்து விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறார்களாம்.
இந்தக் காரணங்களால் படத்தை அறிவித்தபடி டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது.
என்ன நடக்கப் போகிறதெனப் பார்ப்போம்?











