சினிமா செய்திகள்

25 கோடி சம்பளம் – வியக்க வைக்கும் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை.

இப்போது அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதேசமயம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் தேதிகள் ஒத்துவராததால் சங்கமித்ரா படத்துக்கு முன்பாக இன்னொரு படத்தை சுந்தர்.சி இயக்குவதெனவும் அந்தப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டதாம்.

அதனால் அரண்மனை வரிசைப் படங்களில் அடுத்ததாக அரண்மனை 4 படம் எடுப்பதென முடிவு செய்தாராம் சுந்தர்.சி.

அந்தப்படத்தில் விஜய்சேதுபதி சந்தானம் ஆகியோர் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்கள்.

உடனடியாக இந்தப்படத்துக்குத் தேதிகள் கொடுத்துவிட்டாராம் விஜய்சேதுபதி. அதற்குக் காரணம் அவருக்குப் பேசப்பட்ட சம்பளம்.ஆம், இந்தப்படத்தில் நடிக்க அவருக்கு இருபத்தைந்து கோடி சம்பளமாம்.இவ்வளவு சம்பளம் என்பதால் முன்பு ஒப்புக்கொண்ட படங்களைத் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.

சுந்தர்.சி யின் பிறந்தநாளன்று இவை எல்லாம் இறுதி செய்யப்பட்டுவிட்டனவாம்.

இந்தப்படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனமே வெளியிடவிருக்கிறதாம்.

Related Posts