சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தில் நிவின்பாலி – உண்மை என்ன?

நடிகர் விஜய் இப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படமான வாரிசு படம் 2023 பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்து விஜய் நடிக்கும் விஜய் 67 படத்தின் வேலைகளும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.

விஜய் 67 படத்தை மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார்.
ஏற்கெனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் வில்லன்களாக இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் கெளதம்மேனன் அல்லது இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின.சமூக ஊடகங்களில் இச்செய்து வேகமாகப் பரவத்தொடங்கியது.

இதை உடனடியாக நிவின்பாலி தரப்பினர் மறுத்துவிட்டனர்.

விஜய் 67 படத்தில் நிவின்பாலி நடிக்கவிருப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று கூறுகின்றனர்.

விஜய் 67 படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் வரை இதுபோன்ற வதந்திகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

Related Posts