சினிமா செய்திகள்

தனுஷின் அதிரடி முடிவு – ஆச்சரியத்தில் திரையுலகம்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

இவற்றில், வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜூலை 2,2022 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சத்யஜோதி நிறுவனம், தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அந்தப்படத்தை ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அப்படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேடும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. தென்காசிப்பக்கம் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இதே சத்யஜோதி நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தாராம் தனுஷ்.

அப்படத்துக்கு இயக்குநர் ஒப்பந்தமாகாமல் இருந்தது.

இப்போது, அடுத்த படத்துக்கான இயக்குநரையும் தனுஷ் தேர்ந்தெடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவர் வேறு யாருமல்ல, கேப்டன் மில்லர் படத்தை இயக்கவிருக்கும் அருண்மாதேஸ்வரன் தான் என்கிறார்கள்.

அவருடைய இயக்கத்தில் முதல்படத்திலேயே நடிக்க யோசித்த தனுஷ், இப்போது முதல்படம் தொடங்குமுன்பே அடுத்த படத்தையும் அவரே இயக்கட்டும் என்று சொல்லியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts