செய்திக் குறிப்புகள்

தணிக்கைத்துறை அனுமதி மறுத்த படத்துக்கு சர்வதேச விருதுகள் – நடிகர் பெருமிதம்

க்ரின் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் தயாராகியுள்ள தமிழ்த் திரைப்படம் “அந்த நாள்”.

அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு ஆகியோர் நாயகிகளாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம், உலகெமங்கும் பல சர்வேதச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 8 அதிகாரப்பூர்வமான விருதுகளைப் பெற்றுள்ளது. 

“அந்த நாள்” நரபலி மற்றும் ப்ளாக் மேஜிக் ஆகியனவற்றைக் கருவாகக் கொண்டதால் இப்படத்துக்கு தணிக்கைத்துறை சான்றிதழை மறுத்தது. அதன்பின்னர் மறுதணிக்கைக்குழு வாரியம் இப்படத்தை வெளியிட அனுமதி கொடுத்தது. 

தணிக்கைத்துறை அனுமதி மறுத்த இந்தப்படத்தின் திரைக்கதையைக் கையாண்ட விதம், சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் இயக்குநர் வி.வி.கதிரேசன், ஐரோப்பிய திரைப்பட விழாவில்(EUROPE FILM FESTIVAL) சிறந்த இயக்குநருக்கான விருதையும், அறிமுக நடிகர் ஆர்யன் ஷியாம், நியூயார்க் மூவி அவார்ட்ஸ் (NEWYORKMOVIE AWARDS)
அமெரிக்கன் கோல்டன் சர்வதேச திரைப்பட விழா (AMERICAN GOLDEN INTERNATIONAL FILM FESTIVAL) மேடுஸ் திரைப்பட விழா (MEDUSAFILMFESTIVAL) உலகத்திரைப்படவிழா சிங்கப்பூர் (WORLDFILMCARNIVALSINGAPORE) உள்ளிட்ட 4 சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தன் படங்களைச் சர்வதேச திரைப்படவிழாக்களுக்கு அனுப்பிப் பல்வேறு விருதுகளைப் பெற்றுவருகிறார். அவருடைய முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷ்யாமும் தான் நடித்த, “அந்த நாள்” திரைப்படத்தைப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த விருதுகளுக்காக, ஆர்யன் ஷ்யாமை வாழ்த்தியதோடு விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளாராம் பார்த்திபன்.

Related Posts