சினிமா செய்திகள்

உதயநிதிக்கு அனுமதி எனக்கு இல்லையா? ஷங்கர் கேள்வி – நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. 
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம்.

ஆனால்,அரசாங்க அலுவலகங்கள் அங்கே இயங்குவதால்,திரைப்படப்படப்பிடிப்புகளுக்கு சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி தருவார்களாம்.

ஷங்கரோ.தொடர்ச்சியாகப் பத்துநாட்கள் அங்கே படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்று கேட்டிருக்கிறார், அவரிடம் இந்த விதிமுறையைச் சொன்னபோது, இப்போது உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு அங்கே வாரநாட்களிலும் நடந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

அப்படியானால்? மாமன்னன் படப்பிடிப்புக்கு வாரநாட்களில் அனுமதி கொடுக்கப்பட்டதா? என்று விசாரித்தால்,

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படப்பிடிப்பு அங்கே நடைபெற்றது உண்மைதான். ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 
ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் திங்கட்கிழமையும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டார்களாம்.அப்போது அவர்களுக்கும் அனுமதி தர மறுத்துவிட்டார்களாம். 

அதன்பின், கடும் முயற்சிகளுக்குப் பின் சிறப்பு அனுமதி பெற்று திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடந்ததாம்.

அந்த விசயத்தைக் கேள்விப்பட்டதால்தான் ஷங்கர் தரப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

சரி, இந்தியன் 2 படப்பிடிப்பு என்னவாகும்? அங்கு வார இறுதி நாட்கள் மட்டுமே அனுமதி என்று சொல்லிவிட்டதால் வேறு இடம் தேடுவதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts