ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடந்த கடைசிநேர அதிரடி மாற்றம்
ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மற்ற எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை.
ஆனால், அப்படம் குறித்த பல அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலவிக்கொண்டேயிருக்கின்றன.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய மனோஜ்பரமஹம்சாவை ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். அவர் இயக்குநர் நெல்சன் மற்றும் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருந்தார்.
எனவே, ஜெயிலர் படத்திலும் அவரே இருக்கட்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உட்பட எல்லோரும் ஒப்புக்கொண்டிருந்தார்களாம்.
இப்போது படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அதில் அதிரடி மாற்றம் நடந்திருக்கிறதாம்.
ஆம், ஜெயிலர் படத்துக்கு விஜய்கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஆடை, சிந்துபாத் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இவர் இயக்குநர் நெல்சனோடு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.
ஏன் இந்தக் கடைசி நேர மாற்றம்?
மனோஜ்பரமஹம்சாவின் சம்பளத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவர் ஏற்கெனவே வாங்கிய சம்பளத்தை விடக் குறைவாக வாங்கிக் கொள்ளும்படி சொன்னார்களாம்.
ரஜினி படம் என்பதால் ஒப்புக்கொள்வார் என்று நினைத்து அப்படிச் சொன்னார்களோ? என்னவோ?
ஆனால், அவரோ தனக்கான சம்பளத்தைக் குறைக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.எனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட விஜய்கார்த்திக் கண்ணனை ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.











