போயஸ்கார்டனில் அட்லி – ஆச்சரியத்தில் திரையுலகம்
2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. அதற்கடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார்.பிகில் நாளை வெளியாகவிருக்கிறது.
இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி, சுமார் இருபது கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.அதுவும் ரஜினி வீடு இருக்கும் போயஸ்கார்டன் பகுதியில் வாங்கியிருக்கிறாராம்.
வாங்கிய வீட்டில் தரைப்பகுதி மற்றும் சில சுவர்களில் கிரானைட் கற்கள் பதிக்க மட்டும் இரண்டு கோடி செல்வழித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
கிரானைட் கற்கள் வாங்க ஒரு முக்கிய அரசியல் புள்ளியின் உதவி பெற்று விலை குறைவாக வாங்கினார் என்று சொல்லப்படுகிறது.
இயக்குநராகி சில ஆண்டுகளிலேயே அட்லி வீடு வாங்கியது அதுவும் போயஸ்கார்டனில் வீடு வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளதாம்.











