நாடோடிகள் 2 படத்துக்காக சமுத்திரக்கனியின் புதிய கெட்டப்
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்
எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.
இதில் சசிகுமார் – அஞ்சலி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன்,ஒளிப்பதிவு ஏகாம்பரம்,கலை ஜாக்கி,படத்தொகுப்பு ரமேஷ்,பாடல்கள் யுகபாரதி,சண்டைப் பயிற்சி திலீப் சுப்புராயன்,நடனம் தினேஷ், ஜான்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும்.
இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் சமுத்திரக்கனி.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக மொட்டையடித்து சில நாட்கள் ஆன முடியலங்காரத்துடன் காட்சி தருகிறார் சமுத்திரக்கனி.











