சினிமா செய்திகள்

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சூரி – புதியபட விவரம்

நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் விடுதலை படத்தின் முதல்பாகத்தில் அவர்தான் நாயகன்.அப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சி வெளியாகி அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது சூரிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

அதற்கடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் தயாராகும் கொட்டுக்காளி படத்திலும் அவர் நாயகனாக நடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாளத்தில் புகழ்பெற்ற நாயகி அன்னாபென் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவற்றிற்கடுத்து விக்ரம்சுகுமாரன் இயக்கத்தில் ஓர் இணையத்தொடரில் அவர் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவைதவிர மேலும் சில படங்களில் அவர் கதாநாயகனாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில் இன்னொரு புதியபடத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ்ஜெயராஜ் மற்றும் அண்மையில் வெளியான சிங்கிள்ஷங்கரும்ஸ்மார்ட்போன்சிம்ரனும் ஆகிய படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டுயோஸ் நிறுவனம் புதியபடமொன்றைத் தயாரிக்கவிருக்கிறது.

அப்படத்தை எதிர்நீச்சல்,காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்குகிறார். அந்தப்படத்திலும் சூரிதான் கதாநாயகன்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts