சினிமா செய்திகள்

கபிலனின் நினைவிருக்கா – ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய முதல்பாடல்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான நினைவிருக்கா? என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடலை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார்.இதை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஓ காதல் கண்மணி உள்ளிட்ட சில படங்களில் பாடியிருக்கிறார். அவர் 21 வயது வாலிபனாகி பாடியிருக்கும் முதல்பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் காணொலி வெளியாகி இரண்டுநாட்களில் சுமார் 27 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.

பாடல்வரிகள்….
——————–

ஆண்: நினைவிருக்கா அழகே நாம்…
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்…
அடியே நாம்…
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்…
அழகே நாம்…

ஆண்: மறப்போமா மறப்போமா…
மறுப்போமா மறுப்போமா…
நாட்களை நாம்…

நினைவிருக்கா நீ முன்னிருக்க…
நான் பின்னிருக்க…
நினைவிருக்கா நான் நிழலடிக்க…
நீ வெடி வெடிக்க…

ஆண்: அந்த வானம் பூமி ஆனாலும்…
நம் காதல் தூங்காதே…

ஆண்: இந்த பூமி பாலை ஆனாலும்…
நம் பாடல் ஓயாதே…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
நான் பின்னிருக்க…
நினைவிருக்கா நான் எதிர்களிக்க…
நீ வெடிவெடிக்க…

ஆண்: மறப்போமா மறப்போமா…
மறுப்போமா மறுப்போமா…
நாட்களை நாம்…

ஆண்: குழலோடு கேட்காதே…
காற்றில் பேசும் வார்த்தையை…

ஆண்: அலையோடு கேட்காதே…
நீந்தி போகும் தூரத்தை…
இவனோடு கேட்காதே…
கண்ணில் வாழும் ஈரத்தை…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
நான் பின்னிருக்க…
நினைவிருக்கா நான் எதிர்களிக்க…
நீ வெடி வெடிக்க…

பெண்: அட கிருக்கா அட கிருக்கா…
நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க…

பெண்: நினைவிருக்கா…
நினைவிருக்கா…
நினைவிருக்கா…

பெண்: நான் தூங்க போன மீனில்லை…
நீ தூண்டில் போடாதே…
அந்த கால மாற்றம் மாறாதே…
நீ காற்றில் ஏறாதே…

ஆண் & பெண்: ஓஹோ…
இன்னொரு நெஞ்சம் எனக்கில்லை…
உன்னிரு கண்களில் கனவில்லை…
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே…

ஆண் & பெண்: ஓஹோ…
பின்னிய காலங்கள் கணக்கில்லை…
தண்ணீரில் கோலங்கள் எனக்கில்லை…
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

ஓஓ…

பெண்: நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

பாடல் காண…..

Related Posts