தனுஷூடன் இணைந்தார் சசிகுமார் – படத்தில் புதிய மாற்றம்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.
சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
ஜூலை 16 அன்று இரவு இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார்.
சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கிறோம் என்று கெளதம்மேனன் சொல்ல , உங்களோடு சேர்ந்து வேலை செய்வது எனக்கு பெரிய சந்தோஷம் என்கிறார் சசி குமார்.
தொடர்ந்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைகிறது என்கிறார்கள்.
சசிகுமார் படத்துக்குள் வந்திருக்கும் நேரத்தில் படத்துக்கு புதிய லோகோ உருவாக்கியிருக்கிறார்களாம். அதை ஜூலை 20 ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.