பதட்டத்தில் சன் தொலைக்காட்சி உதவும் சிவகார்த்திகேயன்
தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிப்பது சன் தொலைக்காட்சி. அண்மைக்காலமாக அந்த முதலிடத்துக்குச் சோதனை வந்திருக்கிறதாம்.
அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி மிக நெருக்கமாக வந்துவிட்டதாம்.
எடுத்துக்காட்டாக சன் தொலைக்காட்சி 1100 என்கிற எண்ணில் இருந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி 600 இலிருந்து 700 க்குள் இருக்கும்.
தற்போது அந்த இடைவெளி மிகக்குறைந்து விஜய் தொலைக்காட்சி 1000 வரை வந்துவிட்டதாம்.
இதனால் பதட்டமான சன் தொலைக்காட்சி, பல புதிய தொடர்கள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அவற்றில் ஒன்றுதான் விஜய்சேதுபதி கலந்து கொள்ளும் சமையல் நிகழ்ச்சி.
அதைத்தொடர்ந்து, பிரபலங்களைக் கூட்டிவந்து அவர்களே சங்கப்படுமளவுக்கு அல்லது கோபப்படுமளவுக்குக் கேள்விகள் கேட்கக் கூடிய புதிய நிகழ்ச்சியைத் தொடங்கவிருக்கிறார்களாம்.
சும்மா கிழி என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்நிகழ்ச்சியின் முதல்விருந்தினர் சிவகார்த்திகேயன் என்று சொல்லப்படுகிறது.
அவரை நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.விக்னேஷ் கேள்விகளால் துளைத்தெடுக்கப்போகிறார் என்கிறார்கள்.











