சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் 46 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழில் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டார் விஜய் சேதுபதி. இதற்கான குரல்பதிவுப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ். இவர் முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துக் கொடுக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக இமான், படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள காணொலியின் மூலம், இதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று தெரியவருகிறது.

இது விஜய்சேதுபதியின் 46 ஆவது படம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Posts