விஜய்யின் திடீர் முடிவு – சர்கார் படக்குழு அதிர்ச்சி
விஜய் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.
ஆனாலும் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ் அல்லவா?
அதனால் படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் சர்கார் படத்தின். சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி.
இன்று ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி கீர்த்திசுரேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
படத்தை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்ச்சியில் நாயகன் விஜய்யும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டார்களாம்.
இனிமேல் படம் சம்பந்தப்பட்ட விளம்பர விசயமாக நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.
ஏற்கெனவே அஜீத், பட விளம்பரங்களுக்கு வர மாட்டேன் என்று சொல்லி அதைக் கடைபிடித்து வருகிறார்.
இனிமேல் விஜய்யும் இதைக் கடைபிடிக்கப் போகிறாரா? அல்லது இந்தப்படத்துக்கு மட்டும் அப்படியா? என்று தெரியவில்லை.
ஆனால் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்கிற விஜய்யின் திடீர் முடிவு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.











