September 21, 2026
Uncategorized சினிமா செய்திகள்

இது ராசியில்லாத எண்ணா? – 13 படநிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படம் வெற்றியடைந்தது. அப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த வெற்றிக் கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் எஸ்.நந்த கோபால், மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.
 
ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கே.விவேக் இயக்குகிறார்.

இப்படத்தில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.நகைச்சுவை நடிகர் ஆதித்யா கதிர் முக்கியவேடமேற்றிருக்கிறார்.

இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேஎஃப்.காஸ்ட்ரோ படத் தொகுப்பாளராகவும்,பி.எஸ்.இராபர்ட் கலை இயக்குநராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள்.

இப்படத்தின் அறிமுகவிழா அண்மையில் (மே 28,2022) நடந்தது.

அதில் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், நாயகிகள் மூவர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய ஜி.வி.பிரகாஷ்….

தயாரிப்பாளர் நந்தகோபால் சார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்துக்காக முன்தொகை கொடுத்திருந்தார். ஆனால் கதை சரியாக அமையாததால் அப்படம் நடக்கவில்லை. அதன்பின் ஒன்றுக்குப் பலமுறை அவரைத் தொடர்புகொண்டு, அந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர் பணத்தை வாங்கிக் கொள்ளாமல் இந்தக்கதையை அனுப்பினார்.

ஏற்கெனவே டார்லிங் என்கிற த்ரில்லர் படத்தில் நடித்திருக்கிறேன். இதுவும் த்ரில்லர் மற்றும் ஹாரர் என்றதும் முதலில் மறுத்தேன்.அப்புறம் கதையைக் கேட்டுப்பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் என்றார். அதன்பின், இந்தக்கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது. இப்போது படத்தை முடித்துவிட்டோம்.

சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர் ஆகிய படங்களுக்கு சித்துகுமார் இசையமைத்திருந்தார். அவ்விரண்டும் வெற்றி பெற்றன. அதேபோல் இப்படமும் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

13 ராசியில்லாத எண் என்கிறார்கள். என்னுடைய பிறந்தநாளே 13 ஆம் தேதிதான். ஜூன் 13 என்னுடைய பிறந்தநாள்.அதனால் அது நல்ல எண் தான்.

இந்தப்படத்தில் மூன்று நாயகிகள், கெளதம்மேனன் சார், ஆதித்யாகதிர் உள்ளிட்ட எல்லோரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

படம் சிறப்பாக வந்திருக்கிறது. வழக்கம்போல் அனைவரும் ஆதரவு கொடுத்து இந்தப்படத்தையும் வெற்றிப்படமாக ஆக்குங்கள். நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts