சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் புதிய கோரிக்கை

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.

இந்தப்படத்தில் புதுமுக நடிகை ஊர்வசிரடேலா என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கவுள்ளனர் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடந்திருக்கிறது. ஒரு பாடல் மற்றும் இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு அண்மையில் குலுமணாலியில் நடந்தது. அங்கும் சண்டைக்காட்சி ஒன்றும் பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாம்.

அங்கு எடுக்கப்பட்ட, நாயகி ஊர்வசி ரடேலாவுடன் நாயகன் சரவணன் இருக்கும் புகைப்படங்களை வெளீயிட்டுள்ள படக்குழு, படத்தின் நாயகன் பெயரைக் குறிப்பிடும்போது அருள் சரவணன் என்றோ சரவணன் அருள் என்றோ சொல்லாமல் சரவணன் என்று மட்டும் குறிப்பிடவும் என்கிற கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

Related Posts