சினிமா செய்திகள்

மாரிசெல்வராஜுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – மீட்டெடுத்த தனுஷ்

ஏப்ரல் 23,2021 அன்று நடிகர் தனுஷ் வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார்.

தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.அப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மித்ரன்ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அது ஏற்கெனவே இரண்டு முறை தள்ளிப் போயிருக்கிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் மாரிசெல்வராஜ் படத்தை இப்போதே அறிவிக்கக் காரணம் என்ன?

காரணம் இருக்கிறதாம்.

மாரிசெல்வராஜ் அடுத்து எங்கள் நிறுவனத்துக்குப் படம் இயக்கவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர். மாரிசெல்வராஜுக்கு அதில் விருப்பம். ஆனால் அந்தத் தயாரிப்பாளர் படத்தில் நடிக்க தனுஷ் விரும்பவில்லையாம்.

இந்நிலையில், மாரிசெல்வராஜை முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் போட்டுவிட தயாரிப்பாளர் முயன்றிருக்கிறார். மாரி செல்வராஜ் அதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறியதாகச் சொல்லப்படுகிறது.

செய்தியறிந்த தனுஷ், அதிரடியாக மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைகிறேன் என்று முதலில் அறிவித்துவிட்டார்.

இதனால், தயாரிப்பாளரின் அன்புத்தொல்லையிலிருந்து மாரிசெல்வராஜ் தப்பியதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts