பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பறிவு முன்னோட்டம் வெளியிடப்பட்டது எப்படி?
அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ள படம் அன்பறிவு. இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்தை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நேற்று வெளீயிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் அன்பறிவு முன்னோட்டம் வெளியிடப்பட்டது எப்படி? என்றால் அதற்கு ஒரு கதை இருக்கிறது.
இப்படத்தை இயக்கியிருக்கும் அஸ்வின்ராம் இயக்குநர் அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அதுவல்ல விசயம்.தற்போது கமல் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் விஜய்டிவி மகேந்திரனுடைய சகோதரர் மகன் அவர்.
அஸ்வின்ராம்தான் தன்னுடைய பட முன்னோட்டத்தைக் கமல் வெளியிடவேண்டும் என்று விருப்பப்பட்டாராம்.
அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே விஜய்டிவி மகேந்திரன் தொலைக்காட்சி தரப்பு, பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியனவற்றோடு பேசி இதை நடத்தி வைத்தார் என்கிறார்கள்.











