புதிய சர்ச்சையில் சிக்கிய விஸ்வாசம்
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 அன்று வெளியானது.
படம் வெளியான பிறகு, இந்தப் படத்தின் கதை, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது.
கணவனின் வன்முறை குணத்தால் அவரைப் பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பின்னர் மகனுக்கு ஒரு பிரச்னை ஏற்பட அதை தந்தை எப்படி சரி செய்கிறார்? என்பது தான் துளசி படத்தின் கதை.
‘விஸ்வாசம்’ படத்தில் மகன் என்பதற்குப் பதிலாக மகள் என்று மாற்றியிருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி இது துளசி படத்தின் காப்பிதான் என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.











