இளையராஜா 75 நிகழ்ச்சி நிரல் இதுதான்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக இளையராஜா நடத்தவிருக்கும் ‘இளையராஜா75’ நிகழ்ச்சிக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்கான நுழைவுசீட்டு விற்பனை துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து புக் மை ஷோ இணையதளம் மூலமும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான அகன்ற திரை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிக்காக ‘இளையராஜா75’ டீசர் பல உருவாக்கப்பட்டன. அவற்றை, ஒரே நேரத்தில் விஷால்,கார்த்தி,விஜய்சேதுபதி, ஜெயம் ரவி,ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, ,அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
இவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று காணொலி பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…
பிப்ரவரி 2 ஆம் தேதி,இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். இதை அவர் ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்கிறார்.
அடுத்தநாள் 3 ஆம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடைபெறுகிறது.
இவ்வாறு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.











