October 14, 2026
செய்திக் குறிப்புகள்

ராஜமெளலியைவிட பிரசாந்த்நீல் சிறந்த இயக்குநர் – பிரபாஸ் பேட்டி

கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இப்போது தயாரித்திருக்கும் படம், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்.இப்படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் மற்றும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக சலார்: பார்ட் 1 இருக்கிறது.

இரண்டு நண்பர்களுக்கு இடையேயான பிணைப்பைச் சொல்கிறது சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர். 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் பல இரத்தக்களரியான ஆக்சன் காட்சிகள், வன்முறை மிகுந்த அதிரடி காட்சிகள் நிறைய உள்ளது. ‘ஏ’ சர்டிபிகேட் எனும் முத்திரையே படத்தின் ஆக்சன் அளவைப் பிரதிபலிக்கிறது.

இப்படம் குறித்துப் பேசிய நாயகன் பிரபாஸ் கூறியதாவது….

கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும். மேலும் முதல்முறையாக இரசிகர்கள் படத்தில் ஒரு கதாபாத்திரமாக என்னைப் பார்ப்பார்கள்.

நானும் பிரசாந்தும் இப்படத்திற்காக ஒன்றாக இணைந்தே வேலை செய்தோம், எனக்குத் தோன்றிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், அவர் நான் என்னனென்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். படத்திற்கு நான் சரியானது என்று நினைத்த சில உடல் மொழி பற்றி அவரிடம் சொன்னேன். அவரும் கூட நிறைய ஐடியா தந்தார். எந்தவொரு முக்கியமான காட்சிக்கு முன்பும் நாங்கள் விவாதிப்போம், நான் அந்தக் கதாபாத்திரத்தை அணுகும் விதம் குறித்து, நாங்கள் ஓய்வெடுக்கும்போதும், வேடிக்கையாக, பேசும்போதும் ஒன்றாக விவாதிப்போம் வொர்க் ஷாப் செய்தோம்.

என் வாழ்நாளில் 21 வருடங்களாகத் திரையுலகில் பணியாற்றிவருகிறேன்.இவ்வளவு வருட்ங்கள் நான் பணிபுரிந்ததில் இவர்தான் சிறந்த இயக்குநர். படப்பிடிப்புக்கு எப்போது கூப்பிடுவார் என்ற ஆர்வத்தில் இருந்தேன். செட்டுக்குப் போவதை விட, நடிப்பதை விட, நான் பிரசாந்துடன் நேரத்தைச் செலவிட விரும்பினேன். இதுதான் என் மனதில் முதலில் தோன்றியது, கடந்த 21 வருடங்களில் இதை நான் உணர்ந்ததில்லை. கடந்த 6 மாதங்களாக இந்த வலியை உணர்ந்தேன். ஒரு மாதத்திற்குள் நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

பிரசாந்த் ஒரு ஹீரோவுக்கான-இயக்குநர், நான் இந்த நேரத்தில் வரலாமா? என்று கேட்டால் அவர் அதற்கேற்றவாறு திட்டமிட்டுவிடுவார். நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தவுடன், குறிப்பாக நான், ஸ்ருதி மற்றும் பிருத்வி போன்றவர்கள் வந்தவுடன் ஷூட்டிங் ஜெட் வேகத்தில் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடக்கும். நாங்கள் இருக்கும் போது எங்கள் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.இதனால், நான் செட்டில் எப்போதும் காத்திருந்ததில்லை, நாங்கள் அவர்களிடம் பிரஷாந்த், நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொன்னாலும் அவர் மறுத்துவிடுவார், நான் முதல் ஷெட்யூலுக்கு வந்த போது, எத்தனை மணிக்கு என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ஹீரோ எண்ட்ரி ஆகி விட்டார், இனி ஹீரோவின் காட்சிகளை மட்டும் எடுப்போம் என்று சொல்லி எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார்கள்.அப்போது நான் அவரிடம் சொன்னேன், பரவாயில்லை, என்னுடைய பாதிப் படங்களில் நான் காத்திருந்திருக்கிறேன் என்றேன்.

சலார் படத்தில் எனது கதாபாத்திரத்திற்காக நான் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. பிரசாந்த் கதாபாத்திரம் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டேன். இது எனக்கு பொதுவான விஷயம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts