சினிமா செய்திகள்

கடைசி நேரத்திலும் கைகொடுத்த டிடிவி.தினகரன் – கீ படம் வெளியானது

நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.காளீஸ் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் பெரிய நட்டத்தைச் சந்தித்தது.

அதன் காரணமாக இந்தப்படமும் சிக்கலைச் சந்தித்தது. இப்போது இந்தப்படம் மே 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் படத்தை வெளியிட கடைசி நேரம் வரை இடையூறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன்காரணமாக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டிடிவி தினகரனிடம் போய் முறையிட்டிருக்கிறார். அவர் நடந்த சிக்கல்களைக் கேட்டுக் கொண்டதோடு அதைத் தீர்க்க உதவி புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

ஃபெடரேஷனுக்குக் கட்ட வேண்டிய பெரிய தொகைக்கு டிடிவி தினகரன் உதவி புரிந்திருக்கிறார்.

ஆனாலும் கடைசி நேரத்தில் முப்பது இலட்ச்ம் ரூபாய் பற்றாக்குறையினால் சிக்கல் ஏற்பட்டதாம். அதற்கும் டிடிவி தின்கரனையே நாடியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். அதையும் கொடுக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதனால் கீ படம், காலைக்காட்சி கொஞ்சம் தாமதமாக வெளியாகியிருக்கிறது.

Related Posts