சினிமா செய்திகள்

சிம்பு கேட்கும் சம்பளம் – அதிரும் தயாரிப்பாளர்கள்

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் பத்துதல. அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன.

அப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அதற்குக் காரணம் இருக்கிறதாம்.

மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் சநதை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

அதனால், அடுத்து ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு என் சம்பளம் நாற்பது கோடி ரூபாய் என்று சிம்பு சொல்கிறாராம். அவ்வளவு சம்பளம் கொடுத்தால் இலாபம் ஈட்டவியலாது என்பது தயாரிப்பாளர்களின் தயக்கம். அதனால்தான் புதிய படங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதேசமயம், மாநாடு போல் வெந்து தணிந்தது காடு படமும் பெரிய வெற்றியைப் பெறும். அப்படம் வெற்றி என்றதுமே சிம்புவின் சந்தை மதிப்பு மட்டுமின்றி இயல்பாகவே சம்பளமும் உயர்ந்துவிடும். எனவேதான் இப்போது அவசரப்பட்டு புதிய படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் சிம்பு இருக்கிறார் என்று அவரது தரப்பில் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts