சினிமா செய்திகள்

தேர்தலால் தள்ளிப்போனது டாக்டர் ஏப்ரல் 2 வெளியீடு என சொல்லப்படும் சுல்தான் நிலை என்ன?

மார்ச் 26 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதாக இருந்தது. அப்படக்குழு வெளீயிட்ட மார்ச் 9 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்….

மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.என்று சொல்லப்பட்டிருந்தது.

இதனால், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கும் கார்த்தியின் சுல்தான் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்கிற ஐயம் எழுந்துள்ளது.

ஆனால், திட்டமிட்டபடி ஏப்ரல் 2 ஆம் தேதி படம் வெளீயாகும் என்று அப்படக்குழுவினர் சொல்கிறார்கள்.

ஏப்ரல் 2 ஆம்  தேதி தேர்தல் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும்.அதுமட்டுமின்றி ஏப்ரல் 2 ஆம் தேதி புனிதவெள்ளிக்காக அரசு விடுமுறை நாள் என்பது ஒரு சாதகமான அம்சம்.

இவற்றைவிட கார்த்தி படத்துக்குத் தெலுங்கிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அங்கும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தேர்தல் இல்லை. எனவே அங்கு படத்தை வெளியிடலாம். 

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல்நாளன்று ஒருநாள் வசூல் பாதிக்கப்படலாம் என்பதற்காக சுமார் 15 கோடி வரக்கூடிய தெலுங்கு வெளீயீட்டைத் தள்ளி வைக்க முடியாது என்பதால் திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts