சினிமா செய்திகள்

அடுத்த பட சம்பளம் – அஜீத் அதிரடி

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திலும் இதே தயாரிப்பு நிறுவனம் இதே இயக்குநர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வேறொரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அஜீத் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

அப்போது அஜீத் தரப்பில், அறுபது கோடி சம்பளம் தந்தால் நடிக்கத் தயார் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.

படம் ஓடுகிறதோ இல்லையோ படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்தும் அஜீத்தீன் மனநிலையில் மட்டும் மாற்றமில்லை என்கிறார்கள்.

Related Posts