சினிமா செய்திகள்

அயோக்யா படம் ரிலீசானது – எப்படி?

விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் நேற்று ( மே 10) வெளியாகவேண்டியது. ஆனால் வெளியாகவில்லை.

படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார்.

ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறார்.

அதன் காரணமாகவே படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்காக நடிகர் விஷாலும் கடும் முயற்சிகள் எடுத்து ஒன்றும் நடக்கவில்லை.

அதேசமயம் படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்களின் நெருக்குதல் காரணமாக, மே 9 ஆம் தேதி இரவு முழுக்க நடந்த பேச்சுவார்த்தை நேற்று பகலிலும் தொடர்ந்தது.

மாலைவரை நடந்த பேச்சுவார்த்தையில், முதலில் படத்தை வெளியிட்டுவிடுவோம், அதன்பின்பு பணம் யார் கொடுப்பது? என்று முடிவெடுக்கலாம் என்று கூட்டமைப்பு கூறியதாம்.

அதைச் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டதால் இன்று படம் வெளியாகியிருக்கிறது.

Related Posts