சினிமா செய்திகள்

அயோக்யா ரிலீஸ் – பகலிலும் தொடரும் பஞ்சாயத்து

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை.

படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார்.

ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறார்.

அதன் காரணமாகவே படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்காக நடிகர் விஷாலும் கடும் முயற்சிகள் எடுத்து ஒன்றும் நடக்கவில்லை. எனவே அவர் இதிலிருந்து விலகிக் கொண்டாராம்.

அதேசமயம் படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்களின் நெருக்குதல் காரணமாக, நேற்றிர்ழ்வு முழுக்க நடந்த பேச்சுவார்த்தை இன்று பகலிலும் தொடருகிறதாம்.

மதியம் அல்லது மாலைக்காட்சி படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

Related Posts